"ஆந்திராவில் ஜெகன் ஆட்சி மக்களால் அகற்றப்படும்" - பிரதமர் மோடி
காங்கிரஸ் வழிவந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆந்திராவில் ஊழல் மாஃபியா ஆட்சி நடத்தி வருவதாகவும் ஜூன் 4ஆம் தேதி அது கடந்தகால ஆட்சியாகி விடும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சமூகவலைத்தளத்தில் தெலுங்கில் அவர் வெளியிட்ட பதிவில், ஆந்திராவின் பல பகுதிகளுக்கு சென்றதாகவும் தெலுங்குதேசம் பாஜக ஜனசேனா கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் முடிவெடுத்து விட்டதை உணர்ந்ததாகவும் கூறியுள்ளார்.
தெலுங்குதேசத்துடன் ஏற்கெனவே பாஜக இணைந்து ஆந்திராவில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பணியாற்றியதாக குறிப்பிட்ட மோடி, வரும் காலத்தில் ஜனசேனாவும் இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி, ஆந்திராவில் விவசாய உற்பத்தியை பெருகச் செய்ய உள்ளதாக தெரிவித்தார்.
முன்னதாக விஜயவாடாவில் ரோடு ஷோ நடத்திய பிரதமருக்கு சாலையில் இருபுறமும் குவிந்த மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
Comments